‘அஸ்மின் நீக்கப்பட்டார்’ என்பது வதந்தி, நம்பாதீர்- பிகேஆர்

நேற்றிரவு சமூக ஊடகங்களில் பரவலாகிய பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்ற செய்தி உண்மை அல்ல.

இன்று காலை மலேசியாகினி பிகேஆர் தொடர்பு இயக்குனர் ஷம்சுல் இஸ்கண்டரை அழைத்துக் கேட்டபோது சமூக ஊடகங்களில் கூறப்பட்டிருப்பது போல் அஸ்மினைக் கட்சிநீக்கம் செய்வதற்கான கூட்டம் எதுவும் நேற்றிரவு நடக்கவில்லை என்றார்.

“அது வெறும் வதந்தி”, என்றார்.

நேற்றிரவு முகநூலிலும் டிவிட்டரிலும் பொருளாதார விவகார அமைச்சரான அஸ்மின் அலி பிகேஆரிலிருந்து நீக்கப்பட்டார் என்ற செய்தி படுவேகமாக பரவியது.

கட்சி உதவித் தலைவர் ரபிசி ரம்லியுடன் ஏற்பட்ட சச்சரவுதான் அவர் கட்சிநீக்கம் செய்யப்பட்டதற்குக் காரணம் என்றும் கூறப்பட்டிருந்தது.

ஆனால், அச்செய்தியைத் தெரிவித்தவர் யார் என்பது மட்டும் எதிலும் குறிப்பிடப்படவில்லை.