மார்ச் 15 -இலிருந்து ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் சாலைப் போக்குவரத்துக்கு எதிராக மூடப்படும் , பேருந்துகள் மட்டுமே அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று கூட்டரசு பிரதேச அமைச்சர் காலிட் அப்துல் சமட் கூறினார்.
ஜாலான் எஸ்பாகான் தொடங்கி ஜாலான் மலாயுவரை ஒரு கிலோ மீட்டர் நீளத்துக்கு அச்சாலை மூடப்படும். பொதுமக்கள் குறிப்பாக, கடைகளில் பொருள் வாங்குவோர் வசதிக்காக அவ்வாறு செய்யப்படுவதாக காலிட் கூறினார்.
“கோலாலும்பூர் மாநகராட்சி மன்றம் சாலையை மூடுவது தொடர்பில் இணையத்தில் ஒரு கருத்துக்கணிப்ப்பைச் செய்தது. அதில் கலந்துகொண்டோரில் பெரும்பகுதியினர் அத்திட்டத்தை ஆதரித்தனர்.
“சோகோவிலிருந்து விஸ்மா பண்டார்வரையிலான பகுதியில் வாகனங்கள் ஓடாமல் பார்த்துக் கொள்ள விரும்புகிறோம்”, என்றாரவர்.
-பெர்னாமா