முன்னாள் கோத்தா திங்கி எம்பிமீது 14 குற்றச்சாட்டுகள்

முன்னாள் கோத்தா திங்கி எம்பி நூர் எஸாடின் முகம்மட் ஹருன் நராஷிட்மீதுகையூட்டு பெற்றதாக இன்று கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் 14 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

கடந்த வாரம் எஸானுடின்மீது 2013க்கும் 2014க்கும் இடையில் ஒரு அச்சிடும் நிறுவனத்திடமிருந்து ரிம50,000 ரொக்கமும் ஒரு துண்டு நிலமும் கையூட்டு பெற்றதாக ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

குற்றச்சாட்டுகளை மறுத்த அவர் எதிர்விசாரணை கோரினார்.

2013-இலிருந்து 2018-வரை கோத்த திங்கி எம்பி-ஆக பணியாற்றியவர் எஸானுடின்.

அவர், பிரதமர்துறையின்கீழ் பெல்டாவின் தொடர்புத் துறை இயக்குனராகவும் பெல்டா முதலீட்டுக் கழக இயக்குனராகவும், பெல்டா குளோபல் வென்சர்ஸ் நிறுவனத்தில் வாரிய உறுப்பினராகவும் இருந்தார்.