செமிஞ்யே இடைத் தேர்தலில் 4முனைப் போட்டி

செமிஞ்யே இடைத் ஹேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை முடிவுக்கு வந்தது.

மார்ச் 2-இல் நடைபெறும் அந்த இடைத் தேர்தல் 4முனைப் போட்டியாக அமையும் என்பதை தேர்தல் ஆணையம் (இசி) உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் அந்தத் தொகுதியில் வெற்றி பெற்றது பக்கத்தான் ஹரப்பான். அந்த வெற்றியை ஹரப்பானால் தக்க வைத்துக்கொள்ள முடியுமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. ஏனென்றால், ஆளும் கட்சிக்கு மலாய்க்காரர் ஆதரவு முன்னைப்போல் இல்லை, குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஹரப்பான், அய்மான் ஸைலானியை அதன் வேட்பாளராகக் களமிறக்குகிறது. ஸைலானி,30, காலஞ்சென்ற அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பக்தியார் முகம்மட் நோரின் மருமகன் ஆவார்.

பிஎன் வேட்பாளர் ஸக்காரியா ஹனாபி. இவர், யுகேஎம் நிர்வாகப் பிரிவில் பணிசெய்து ஓய்வுபெற்ற ஓர் அதிகாரி.

இருவருமே உள்ளூர் வாசிகள்.

இவ்விருவர் தவிர்த்து பிஎஸ்எம்-மின் நிக் அசிஸ் அபிக் அப்துல், சுயேச்சை வேட்பாளர் குவான் சீ ஹெங் ஆகியோரும் இடைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

1959-இலிருந்து கடந்த பொதுத் தேர்தல்வரை அம்னோவின் அசைக்கமுடியாத கோட்டையாக திகழ்ந்த ஒரு பகுதி செமிஞ்சே.
கடந்த பொதுத் தேர்தலில்தான் பக்கத்தான் ஹரப்பான் அங்கு வெற்றி பெற்றது.