ரிம90 மில்லியன் விவகாரம்: பாஸின் நன்கொடையாளர்கள், ஆதரவாளர்களிடம் எம்ஏசிசி விசாரணை

பாஸ் கட்சி 1எம்டிபி நிதியிலிருந்து ரிம90 மில்லியனைப் பெற்றதாகக் கூறப்படுவது குறித்து மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி) விசாரணை நடத்தி வருகிறதாம்.

எம்ஏசிசி -இல் உயர்ப்பதவி வகிக்கும் ஒரு வட்டாரத்தை மேற்கோள்காட்டி இத்தகவலை வெளியிட்ட த மலேசியன் இன்சைட், அடிக்கடி அக்கட்சிக்கு நன்கொடை அளிக்கும் “வர்த்தகர்கள், சமுதாயத்தில் முக்கிய இடத்தில் உள்ளவர்கள்” ஆகியோரின் வங்கிக் கணக்குகளும் ஆய்வு செய்யப்படுவதாகக் கூறியது.

பிப்ரவரி 6-இல் விசாரணை தொடங்கியதிலிருந்து ஊழல்தடுப்பு ஆணையம் அக்கட்சியின் மத்திய செயல்குழு உறுப்பினர் நிக் அப்து நிக் அப்துல் அசீஸ், முன்னாள் கட்சித் தலைவர்வர்களில் ஒருவரான நஷாருடின் மாட் ஈசா ஆகியோரிடம் அது வாக்குமூலங்கள் பதிவு செய்துள்ளது.

பிரபல வழக்குரைஞர் அம்பிகா ஸ்ரீநிவாசனிடத்திலும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஸுக்கு ரிம90 மில்லியன் கொடுக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டியவர்களில் அவரும் ஒருவராவார்.