செமிஞ்யே தேர்தல்| மலேசியாவின் இரண்டாவது பிரதமர் அப்துல் ரசாக் உசேன் இப்போது உயிருடன் இருந்தால் அவரின் மகன் நஜிப் அப்துல் ரசாக் பிரதமராக இருந்த காலத்தில் அவர் பெல்டாவில் செய்த குளறுபடிகளுக்காகக் கழுத்தை நெரித்துக் கொன்றிருப்பார் என பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறினார்.
ஏனென்றால் நஜிப் அரசாங்கம் பெல்டாவைத் தனியார்மயமாக்கி அதனை ரிம6 பில்லியன் கடனாளியாக்கி விட்டது என அஸ்மின்
நேற்றிரவு கம்போங் ரிஞ்சிங் ஹிலிரில் ஒரு செராமாவில் கூறினார்.
“பெல்டாவை உருவாக்கியவர் அப்துல் ரசாக். அரசாங்க நிலங்களில் மக்களைக் குடியேற்றி அவர்களின் பொருளாதார நிலை உயர வழி கண்டவர் அவர். அதனால் மக்களிடையே நிலவி வந்த பொருளாதார ஏற்றத்தாழ்வு குறைந்தது.
“அப்புறம் அவர் மகன்(நஜிப்) வந்தார். பெல்டாவைத் தனியார்மயமாக்கினார்.
“காலஞ்சென்ற அப்துல் ரசாக் மீண்டும் உயிர்பெற்று வந்தார் எனில், மகனைக் கழுத்தை நெரித்தே கொன்று விடுவார்.
“பெல்டா வெண்ட்சர்ஸ் (எப்ஜிவி) பங்குகளைப் பாருங்கள். ரிம4.70 ஆக ஒரு பங்னின் மதிப்பு இன்று 30, 40 சென்னாக உள்ளது”, என்றார்.
பொருளாதார அமைச்சர் என்ற முறையில் பெல்டாவையும் கண்காணிக்கும் அஸ்மின், பெல்டாவின் பிரச்னைகளுக்கு “அம்னோ மலாய்க்காரர்கள்தான்” காரணம் என்றார்.
“பெல்டாவுக்கு இரண்டகம் செய்தவர்கள் அம்னோ மலாய்க்காரர்கள்தான். லிம் கிட்