பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டை ஆதரிப்பதாக பாஸ் ஆகக் கடைசியாக அரசியல் பல்டி அடித்திருப்பதன்வழி அது, தான் முரண்பாடுடைய கட்சி என்பதைத் தானாகவே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது என பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன்.
“அது ஆளும் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தைக் கவிழ்க்கப் பார்க்கும் எதிர்க்கட்சியான பிஎன்னுடன் ஒத்துழைக்க விரும்புகிறது, அதேவேளை அரசாங்கத்தின் தலைவரான மகாதிருக்கும் ஆதரவு தெரிவிக்கிறது.
“இது வினோதமாக உள்ளது. அம்னோவுக்கும் ஆதரவு, மகாதிருக்கும் ஆதரவு.
“இது முதிர்ச்சியான, இணக்கப்போக்குள்ள அரசியலாம், பாஸ் கூறிக்கொள்கிறது. நாங்கள் இதை நிலைகெட்ட அரசியல் என்போம்”, என்று சைபுடின் த மலேசியன் இன்சைட்-டுக்கு அளித்த நேர்க்காணல் ஒன்றில் கூறினார்.
பாஸ் இரு தரப்புக்கும் நல்ல பிள்ளையாக நடந்துகொள்ளப் பார்க்கிறது என்றாரவர்.
உள்நாட்டு வர்த்தக, பயனீட்டாளர் விவகார அமைச்சருமான சைபுடின், பக்கத்தான் ஹரப்பானில் மகாதிரைப் பதவியிலிருந்து வெளியேற்ற சதி வேலைகள் நடப்பதாகக் கூறப்படுவதையும் மறுத்தார்.
மகாதிர் பிரதமராக இருப்பார் என்பது 14வது பொதுத் தேர்தலுக்கு முன்பே ஹரப்பான் கட்சிகள் ஒப்புக்கொண்ட ஒரு விசயம் என்றாரவர்