ஜாஹிட் ஹமிடிமீது நம்பிக்கைமோசடி குற்றச்சாட்டு

இன்று கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில், ஏற்கனவே பல பிரச்னைகளுக்கு ஆளாகியுள்ள அம்னோ தலைவர் ஜாஹிட் ஹமிடிமீது யயாசான் அகால் புடி நிதியைத் தவறான முறையில் பயன்படுத்தியதாக புதிதாக ஒரு நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

ஜாஹிட், யயாசான் அகால் புடியின் அறங்காவலராக இருந்தபோது அந்த அறக்கட்டளை நிதியில் ரிம260,000-ஐ மோசடி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

2016, டிசம்பர் 23-இல் அவர் அக்குற்றத்தைப் புரிந்தாராம்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 409இன்கீழ் அவர்மீது குற்றஞ்சாட்டப்பது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் இச்சட்டத்தின்க்கீழ் இரண்டிலிருந்து 20 ஆண்டுகள்வரை சிறை, பிரம்படி, அபராதம் விதிக்கப்படலாம்.

ஏற்கனவே, பாகான் டத்தோ எம்பியான ஜாஹிட்மீது 46 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.அவற்றில் 45 நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டுகள்.