டாக்டர் மகாதிர் முகம்மட்டைப் பதவியிலிருந்து வெளியேற்ற பக்கத்தான் ஹரப்பானுக்குள் சதிவேலைகள் நடப்பதாகக் கூறப்பட்டு வரும் வேளையில் பிரதமரைப் பதவிவிலகச் சொல்லும் பதாதைகள் அங்குமிங்குமாகக் காட்சிததரத் தொடங்கியுள்ளன.
பங்சாரில், நடைப்பாதை பாலமொன்றில் கட்டிவிடப்பட்டிருந்த ஒரு பதாதையில் “Mahathir letak jawatan, Anwar Ibrahim PM ke-8. Demi Selamatkan Malaysia (மலேசியாவின் நல்வாழ்வுக்கு மகாதிர் பதவி விலக வேண்டும், அன்வார் 8வது பிரதமராக வேண்டும்)“ என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.
இதேபோன்றதொரு பதாதை கோலாலும்பூர், தாமான் பெர்மாத்தாவில் ஜாயண்ட் சுப்பர்மார்க்கெட் அருகில் உள்ள எம்ஆர்டிடி2-இலும் கட்டி விடப்பட்டிருந்ததாக மலேசியாகினிக்குத் தெரிய வந்துள்ளது.
பங்சார் பதாதை பற்றிக் குறிப்பிட்ட பிகேஆர் தொடர்புத் தலைவர் ஃபாஹ்மி பாட்சில், அது ஹரப்பானின் அரசியல் எதிரிகளின் வேலையாக இருக்கும் என்கிறார்
“அதை அகற்றும்படியும் போலீஸ் புகார் செய்யும்படியும் பிகேஆர் உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறேன்”, என லெம்பா பந்தாய் எம்பியுனா ஃபாஹ்மி முகநூலில் பதிவிட்டிருந்தார்.