கடந்த சனிக்கிழமை தொடங்கி நேற்று மாலை மணி 5வரை செமிஞ்யே சட்டமன்ற இடைத் தேர்தல் தொடர்பில் 19 புகார்களைப் பெற்றிருப்பதாகவும் அவற்றில் மூன்றின்மீது விசாரணை தொடங்கியிருப்பதாகவும் போலீஸ் கூறியது.
அனுமதியின்றி செராமா நடத்தப்பட்டதாக ஒரு புகார். விசாரணை செய்யப்பட்டுவரும் மூன்று புகார்களில் இதுவும் ஒன்று என காஜாங் மாவட்ட பொலீஸ் தலைவர் முகம்மட் சப்ரி அப்துல்லா கூறினார்.
செராமாக்களுக்காக நேற்று வரை 51 அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
32 பக்கத்தான் ஹரப்பானுக்கு, 15 பிஎன்னுக்கு ., 4 பிஎஸ்எம்-முக்கு.
இடைத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தேர்தல் பரப்புரைக் காலத்தில் தேர்தல் சட்டத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டுமென முகம்மட் சப்ரி கேட்டுக்கொண்டார்.