செமினி இடைத்தேர்தல் | டிஏபி மற்றும் பிகேஆர் தேர்தல் இயந்திரங்கள், பெர்சத்து வேட்பாளர் வெற்றிக்காக உழைக்கவில்லை என பாஸ் குற்றம் சாட்டியுள்ளது.
எனவே, பிஎச் வேட்பாளர் ஐமான், பிஎன் வேட்பாளர் – பாஸ் ஆதரிக்கும் – ஜக்காரியாவிடம் தோற்றுப்போனால், பாஸ் மீது குற்றம் சுமத்தக்கூடாது என அப்துல் ஹாடி அவாங் கேட்டுக்கொண்டார்.
கடந்த மாதம் நடைபெற்ற கேமரன் மலை இடைத்தேர்தலைக் காட்டிலும், செமினி இடைத்தேர்தல் சூழல் மாற்றமாக உள்ளது என ஹாடி முன்பு கூறியிருந்தார்.
சென்ற வாரம், பெர்சத்து தலைவர் டாக்டர் மகாதிர், செமினி இடைத்தேர்தலில், அம்னோ-பிஎன் –ஐ பாஸ் ஆதரிக்காது என ஹாடி உறுதியளித்ததாக கூறியது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், மகாதீரைச் சந்திக்க ஹாடியுடன் சென்றிருந்த, பாஸ் தலைமைச் செயலாளர் தக்கியுட்டின் ஹஸ்சான் அக்கூற்றை மறுத்தார்.
கேமரன் மலையை விட, செமினியில் பாஸ் – அம்னோ ஒத்துழைப்பு இன்னும் பலமாக உள்ளது என அம்னோ தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
செமினியில், பிஎன் வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்வீர்களா எனக் கேட்டபோது, இன்னும் முடிவு செய்யவில்லை, சூழலைப் பொறுத்து அது அமையும் என ஹாடி சொன்னார்.