சமயத்தை இழிவுபடுத்தி நாட்டின் நல்லிணக்கத்தைக் கெடுக்கும் முயற்சிகளை அரசாங்கம் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்காது என உள்துறை அமைச்சர் முகைதின் யாசின் எச்சரித்துள்ளார்.
“இந்த வெறுக்கத்தக்க நடவடிக்கையில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கப் படுவார்கள்”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
இஸ்லாத்தை இழிவுபடுத்தும் ஆபத்தான போக்கு அண்மையில் தலையெடுத்திருப்பதாகக் கூறிய முகைதின் இது முஸ்லிம்களிடையே ஆத்திரத்தை உண்டுபண்ணியுள்ளது என்றார்.
“இதில், இஸ்லாத்தை இழிவுபடுத்தி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளப்படும் செய்திகளும் அடங்கும்” என்றாரவர்.