ஜாகிர் நாய்க் ஒரு வெளியார். அவர் பினாங்கில் இஸ்லாமிய பரப்புரை செய்ய விரும்பினால் அதற்கு அனுமதி பெற வேண்டும்.
இதைத் தெரிவித்த பினாங்கு துணை முதலமைச்சர் அஹ்மட் ஸாகியுடின் அப்துல் ரஹ்மான், இந்த விதிமுறை வெளிநாட்டைச் சேர்ந்த எல்லாச் சமயப் பிரச்சாரகர்களுக்கும் பொருந்தும் என்றார்.
இதுவரை ஜாகிரோ, அவரது சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்துள்ள நிறுவனமோ அனுமதி கேட்டு விண்ணப்பிக்கவில்லை என்றும் அவர் சொன்னார்.
மாநிலத்துக்கென சட்டங்கள் இருக்கின்றன. அவற்றை எல்லாப் பிரச்சாரகர்களும் பின்பற்ற வேண்டும். அவர்களை அழைத்துவரும் நிறுவனங்கள் பினாங்கு இஸ்லாமிய விவகாரத் துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று ஸகியுடின் கூறினார்.