பாஸ்-இன் ஆதரவு எனக்குத் தேவையில்லை, மகாதிர் கூறுகிறார்

எதிர்க்கட்சிகளின் ஆதரவு, குறிப்பாக பாஸ் கட்சியின் ஆதரவு தனக்கு தேவையில்லை என பிரதமர் துன் டாக்டர் மகாதிர் இன்று கூறியுள்ளார்.

மாறாக, தனக்கு பக்காத்தான் ஹராப்பானின் (பிஎச்) ஆதரவுதான் வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“எனக்கு, 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக. மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவு வேண்டும்.

“எனக்கு பாஸ்-இன் ஆதரவு தேவையில்லை, பிஎச் பிரதிநிதிகள் பாதிக்கும் மேல் நாடாளுமன்றத்தில் இருக்கிறார்கள்,” என இன்று, கிள்ளானில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் கூறினார்.

நேற்று, தான் பிரதமராக தொடர்ந்து இருப்பதில், பாஸ் கட்சியின் நிலைப்பாடு நிரந்தரமானதாக இல்லை, தனக்கு ஆதரவாக அவர்கள் குரல் கொடுக்கின்றனரா இல்லையா என்று புரியவில்லை என்று மகாதிர் தெரிவித்தார்.

அண்மையில், தன்னைச் சந்தித்த சில பாஸ் தலைவர்கள், தான் பிரதமராக இருப்பதற்கு ஆதரவு தெரிவித்ததாக அந்த பிஎச் தலைவர் கூறியிருந்தார்.

ஆனால், அவர்கள் சில சூழல்களில் அவ்வாறு நடந்துகொள்வதில்லை என்றும் மகாதிர் தெரிவித்தார்.