தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ், நஸ்ரியிடம் போலிஸ் விசாரணை

செமினி இடைத்தேர்தல் | செமினி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, பாரிசான் நேசனல் தலைமைச் செயலாளர், நஸ்ரி அப்துல் அஸிஸ் ஆற்றிய உரை தொடர்பில், தேச நிந்தனைச் சட்டம் 1948 கீழ் போலிஸ் விசாரணை செய்து வருகிறது.

இதனைக் காவல்துறை தலைவர் முகமட் ஃபூஸி உறுதிபடுத்தினார்.

“தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடந்து வருகிறது, விரைவில் விசாரணையை நாம் முழுமை செய்வோம்.

“விசாரணை முழுமையடைந்தவுடன், தொடர் நடவடிக்கைக்காக டிபிபியிடம் (ஏஜி அலுவலகம்) ஒப்படைத்துவிடுவோம்,” என இன்று செராஸ்சில் செய்தியாளர்களிடம் அவர் சொன்னார்.

தேச நிந்தனைச் சட்டம் 1948, செக்‌ஷன் 4 (1) கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த பாடாங் ரெங்காஸ் அம்னோ எம்பிக்கு, (முதல் குற்றம் என்றால்) 3 ஆண்டுகள் சிறைதண்டனை அல்லது RM5,000-க்கும் மேற்போகாத அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இதுவரை நஸ்ரி மீது ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளதாக ஃபூஸி தெரிவித்தார்.