நாடு எதொர்நோக்கும் பொருளாதாரப் பிரச்னைகளுக்குக் குறுகிய காலத்தில் தீர்வு காணும் அதிசய விளக்கு எதுவும் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்திடம் இல்லை என்கிறார் அமனா தலைமைச் செயலாளர் முகம்மட் அனுவார் தாஹிர்.
தீர்க்கப்படாமல் உள்ள பிரச்னைகளைத் தீர்ப்பதற்குக் கூடுதல் அவகாசம் தேவை என்றாரவர்.
“பொருளாதாரத்தை மீட்டெடுப்பது சிரமமான நினைத்தவுடன் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண அலாவுதினின் அற்புத விளக்க்கு எங்களிடம் இல்லை. அதனால், எங்களுக்குத் தயவு செய்து சிறிது அவகாசம் கொடுங்கள்.
“எங்களுக்கு அவ்வளவாக அனுபவம் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறோம் …ஆனால், எங்கள் கைகள் சுத்தமானவை. நாங்கள் ஊழல் செய்யாதவர்கள்”, என்று முகம்மட் அனுவார் கூறினார்.