‘நேர்மையாக நினைத்துப் பாருங்கள், இப்போது முற்றிலும் மதிப்பிழந்து கிடக்கும் பிஎன்னுடன் 60ஆண்டுகளாகச் சேர்ந்திருந்தீர்களே, என்ன சாதித்தீர்கள்?’
பெயரிலி_3f4b: மசீச அல்லது மஇகா என்ன செய்யப்போகிறது என்பது பிரச்னை அல்ல, பக்கத்தான் ஹரப்பானுக்கு முழுமனத்துடன் பிளவுபடாத ஆதரவைக் கொடுத்தார்களே சீனர்களும் இந்தியர்களும் அவர்களின் நிலை என்ன என்பதுதான் இப்போதைய கேள்வி.
பெர்சத்து, பிகேஆர், அமனா ஆகியவை இருந்தும் ஹரப்பானால் மலாய்ப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற முடியவில்லை என்கிற நிலையில் அம்னோ-பாஸ் கூட்டணிதான் மலாய்க்காரர்- அல்லாதார் வாக்குகள் இல்லாமலேயே அடுத்த அரசாங்கத்தை அமைக்கப் போகிறது. அப்படி நடக்குமானால், மலாய் இனத்தை மையமாகக் கொண்ட அரசாங்கம் வலச் சாரி இனவாதக் கொள்கைகளை நோக்கியும் சமயம் நோக்கியும்தான் பயணப்படும். சீனர்களும் இந்தியர்களும் கைவிடப்படுவார்கள்.
இதுதான், மலாய்க்காரர் ஆதரவைப் பெறும் திறனற்ற ஒரு கூட்டணியான ஹரப்பானுக்கு வாக்களித்தற்காக சீனர்களும் இந்தியர்களும் கொடுக்கப் போகும் விலை. அவர்கள் ஹரப்பானை ஆதரித்தால் அரசியல் தோல்வியைத் தவிர்க்க அம்னோ பாஸுடன் அணுக்கமாக ஒத்துழைக்க வேண்டிய ஒரு கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது.
சீனர்களிடையேயும் இந்தியர்களிடையேயும் செல்வாக்கிழந்த மசீசவுக்கும் மஇகாவுக்கும் இனி வேலை இருக்காது.
நடுநிலைமையுடனும் சமயச் சார்பற்ற முறையிலும் செயல்பட்டு வந்த அம்னோவுடன் இருந்த நீண்டகால உறவு இனி பழங்கதையாகி விடும். மலேசியா, ஒரே இன- சமய ஆட்சிகொண்ட நாடாக மாறும்- சீனர்களும் இந்தியர்களும் எதிரணியில் நிற்க வேண்டியதுதான்.
ஜாக்காய்: ஹரப்பானுக்கு வாக்களித்த மலாய்க்காரர்- அல்லாதாரைக் குறை சொல்லுகிறீரே, இதே மலாய்க்கார்-அல்லாதார்தானே இதற்குமுன் பலதடவை நடந்துள்ள தேர்தல்களில் பிஎன்னுக்கு வாக்களித்து அதைக் காப்பாற்றினார்கள். அதை மறந்து விட்டீரே. அதன் பின், அம்னோ ஆணவம் கொண்டு நடந்தது, ஊழல் பெருகியது, இனவாதம் பேசத் தொடங்கியது.
ஆம், அம்னோ-பாஸ் கூட்டணி அடுத்த பொதுத் தேர்தலில் வெல்லும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது. அந்த அரசாங்கத்தில் மலாய்க்காரர்- அல்லாதார் இருக்க மாட்டார்கள். அது நமக்கு ஒரு பிரச்னை அல்ல.
பிஎன் அமைச்சரவையில் இருந்தபோது மட்டும் என்ன கிழித்தார்கள்? மலாய்க்காரர்கள் தங்களை மிதவாதிகள் என்று காட்டிக்கொள்ளத்தானே அவர்களை வெறும் அலங்கார பொம்மைகளாக வைத்திருந்தார்கள்.
கொகிடோ எர்கோ: நாட்டில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது ஹரப்பான் அமைச்சரவையில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம்.
பிஎன் ஆட்சியில் ஒரே ஒரு முழு அமைச்சர்தான். மஇகா அஞ்சி அஞ்சி நடந்தது போதும். கட்சியைக் கலைத்துவிட்டு ஹரப்பானில் இணைவீர். மஇகாவுக்கு இனி அமைச்சர் பதவி கிடைக்காது. நடைமுறைக்கு ஏற்ப சிந்தித்து ஹரப்பானில் சேருங்கள்.
குவா வாடிஸ்: மஇகா, மசீச இரண்டுமே பிஎன்னிலிருந்து வெளியேறி ஹரப்பானில் இணையும் நேரம் வந்து விட்டது.
நேர்மையாக நினைத்துப் பாருங்கள், முற்றிலும் மதிப்பிழந்து கிடக்கும் பிஎன்னுடன் 60ஆண்டுகளாகச் சேர்ந்திருந்தீர்களே, என்ன சாதித்தீர்கள்?
கொக்கோமோமோ: உண்மை. மசீச, மஇகா தலைவர்கள் அவர்கள் நேர்-சிந்தனை கொண்ட தலைவர்களாயின் சீனர்களுக்காகவும் மலேசிய இந்தியர்களுக்காகவும் கட்சியைக் கலைத்துவிட்டு பிகேஆரில் அல்லது டிஏபி-இல் இணைய வேண்டும். அவ்வண்ணமே கெராக்கானும் மலாய்க்காரர்-அல்லாத மற்ற கட்சிகளும் செய்வது சாலப் பொருத்தமாகும்.
அம்னோவிலும் பாஸிலும் நேர்மையாக சிந்திப்போரும்கூட ஹரப்பான் கட்சிகளில் ஏதாவது ஒன்றில் தங்களை இணைத்துக் கொள்ளலாம்.