மலேசிய இக்ராம் அமைப்பு (இக்ராம்) கட்டாய மரண தண்டனையைத் தடை செய்ய வேண்டும் எனும் அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது. ஆனால், மரண தண்டனையை நிலைநிறுத்த வேண்டும் என்று அரசாங்கத்திற்கு அது அழைப்பு விடுத்துள்ளது.
‘கட்டாயம்’ எனும் சொல்லை அதிலிருந்து விலக்கிவிட்டால், அக்குற்றத்திற்கு, நீதிமன்றம் வேறு தண்டனை வழங்க அது அனுமதிக்கிறது என இக்ராம் தலைவர் முகமட் பாரிட் ஷேக் அஹ்மாட் தெரிவித்தார்.
“தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் கூறப்பட்டுள்ளது போல், 32 விதிகளை உள்ளடக்கிய 8 சட்டங்களில் – குற்றவியல் சட்டம், ஆபத்தான போதைப் பொருள் சட்டம் 1952, ஆயுதச் சட்டம் (அதிகப்படியான தண்டனை) 1971, கடத்தல் சட்டம் 1961, நீர் சேவைகள் தொழிற்துறை சட்டம் 2006, வர்த்தக உத்திகள் சட்டம் 2010, ஆயுதச் சட்டம் 1960 மற்றும் ஆயுதப்படை சட்டம் 1972 – கட்டாய மரணத் தண்டனையை அகற்ற வேண்டும் எனும் அரசாங்கத்தின் முன்மொழிவை இக்ராம் ஏற்கிறது.
“அதேசமயம், மரணத் தண்டனையைக் கட்டாயம் நிலைநிறுத்த வேண்டும், காரணம் மரணத் தண்டனையின் குறிக்கோள்களான பதிலடி, தவிர்த்தல், தடுத்தல், சமூகத்தின் பாதுகாப்பு, குற்றத்தின் எடையின்படியான தண்டனை போன்றவற்றை அடைய அது பொருத்தமானதாக இருக்கிறது,” என்று அவர் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
இம்மாதம் 11-ம் திகதி தொடங்குகின்ற மக்களவைக் கூட்டத்தில், மரணத் தண்டனையை இரத்து செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது