ஆற்றில் இராசனக் கழிவு: கொட்டியவர்களைத் தேடுகிறது ஜோகூர் போலீஸ்

பாசிர் கூடாங் அருகில் சுங்கை கிம் கிம்மில் இராசயனக் கழிவு கொட்டப்பட்டது குறித்து நேற்றிலிருந்து ஐந்து போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.

அப்பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்கள் அப்புகார்களைச் செய்திருப்பதாக ஜோகூர் போலீஸ் தலைவர் முகம்மட் காலில் காடர் முகம்மட் கூறினார்.

“சுற்றுச்சூழல்துறை ஏற்கனவே விசாரணையைத் தொடங்கிவிட்டது. என்றாலும் போலீசும் விசாரிக்கும்.

“கழிவுகளை ஆற்றில் கொட்டியவர்களைத் தேடிப் பிடிப்போம். அவர்கள் மக்களின் உயிருக்கு ஆபத்தை உண்டுபண்ணுவதோடு ஆற்று நீரையும் மாசுப்படுத்துகிறார்கள்”, என்றாரவர்.

இது பற்றித் தகவலறிந்தவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தைத் தொடர்புகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.