இந்து மதத்தை அவமதித்தார், ஆடவர் ஒருவரைப் போலிஸ் கைது செய்தது

சமூக ஊடகங்களில், இந்துமதம் பற்றி தவறான செய்திகளைப் பரப்பிய 52 வயது ஆடவர் ஒருவரைப் போலிஸ் கைது செய்தது. வழக்கு விசாரணைக்கு உதவ அவர் தடுத்து வைக்கப்படுவார்.

நேற்றிரவு, அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதை, காவல்துறை தலைவர், முகமட் ஃபூஸி ஹருண் இன்று ஓர் அறிக்கையில் உறுதி செய்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், குற்றவியல் சட்டம் பிரிவு 298A மற்றும் தகவல் தொடர்பு, பல்லூடகச் சட்டம் 1998, பிரிவு 233 கீழ் விசாரிக்கப்படுவார் என அவர் சொன்னார்.

“நாட்டில் மதம் மற்றும் இன உணர்வைத் தூண்டும், ஆத்திரமூட்டும் அறிக்கைகளை, சமூக ஊடகங்களில் பதிவேற்றுவது அல்லது பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டுமென பொது மக்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்,” என்றும் அவர் கூறினார்.