சிங்கப்பூர் இன்று பிற்பகல் இரண்டு மணியிலிருந்து போயிங் 737 எம்ஏஎக்ஸ் விமானங்கள் தன் எல்லைக்குள் பறப்பதற்குத் தற்காலிக தடை விதித்துள்ளது. இரண்டு நாள்களுக்குமுன் இத்தியோப்பிய விமான நிறுவனத்தின் விமானமொன்றுவிழுந்து நொறுங்கியத்தில் 157பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐந்து மாத இடைவெளியில் அந்த வகை விமானங்கள் சம்பந்தப்பட்ட இரண்டு விபத்துகள் நிகழ்ந்துள்ளன என்று அது ஓர் அறிக்கையில் கூறியது.
இத் தடை உத்தரவால் பாதிக்கப்படும் விமான நிறுவனங்கள்: சிங்கப்பூர் விமான நிறுவனத்தின் கிளை நிறுவனமான சில்க்ஏர், சீனாவின் சதர்ன் ஏர்லைன்ஸ், கருடா இந்தோனேசியா, ஷண்டோங் ஏர்லைன்ஸ் ஆகியவையாகும்.