‘இந்திரா காந்தி எக்ஷன் டீம்’ (இங்காட்), இந்திரா காந்தியின் 11 வயது நிரம்பிய மகள், பிரசன்னா டிக்ஷாவைக் கண்டுபிடிக்க, அமெரிக்க தூதரகத்தின் மூலம், பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (ஃப்.பி.ஐ.) உதவியை நாட எண்ணம் கொண்டுள்ளது.
மலேசிய காவற்படையின் செயற்பாடுகளில் ஏமாற்றமடைந்ததன் காரணமாக, எதிர்வரும் மார்ச் 19-ம் தேதி, மலேசியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில், ஓர் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளதாக, இங்காட் குழுவிற்குத் தலைமையேற்றிருக்கும் அருண் துரைசாமி கூறினார்.
“இதுவரை நாங்கள் திரட்டி வைத்திருக்கும் ஆவணங்களை, அமெரிக்க தூதரகத்தின் வழி, ஃப்பிஐ-இடம் கொடுக்க உள்ளோம்.
‘மனிதக் கடத்தல்’ என நாங்கள் வகைப்படுத்தியுள்ள இவ்வழக்கை, அமெரிக்கா முறையாகக் கையாளும் என நாங்கள் கருதுகிறோம்,” என அருண் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.