பிஎம் : அவசரக்காலம் அறிவிக்கும் நிலை இன்னும் ஏற்படவில்லை

ஜொகூர் கிம் கிம் ஆற்றில், இரசாயணக் கழிவுகள் கொட்டப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட நச்சு மாசு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால், பேரிடர் அவசரகாலம் அறிவிக்கும் அவசியம் இல்லை என பிரதமர், டாக்டர் மகாதிர் முகமட் இன்று கூறினார்.

எனினும், மாசு நிலைமை இன்னும் முடிவடையவில்லை என்பதால், அனைத்து தரப்பினரையும் எச்சரிக்கையுடன் இருக்க அவர் நினைவூட்டினார்.

“இந்தச் சூழ்நிலையைக் கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருப்பவர்கள், சிக்கலைச் சமாளிக்க எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும்,” என சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்த பின்னர் அவர் தெரிவித்தார்.

-பெர்னாமா