தலைநகரில் உடம்புப் பிடி நிலையங்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு அவை இயங்குவதற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் 16 பேரை ஊழல்தடுப்பு ஆணையம்(எம் ஏசிசி) கைது செய்தது. அவர்களில் ஒருவர் ஒரு போலீஸ் நிலையத் தலைவர்.
அவர்கள் அனைவரும் நேற்றுக் காலை பத்து மணிக்கும் மாலை 5 மணிக்குமிடையில் கைது செய்யப்பட்டார்கள் என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது. கைது செய்யப்படுவதற்குமுன் மூன்று மாதங்களாக அவர்கள் கண்காணிக்கப்பட்டு வந்தார்கள்.
கைதான 16பேரில் எழுவர் அரசாங்கப் பணியாளர்கள்.
அவர்களில் கோலாலும்பூர் மாநகராட்சி மன்றம்(டிபிகேஎல்), தீ அணைப்பு மற்றும் மீட்புத்துறை ஆகியவற்றின் அதிகாரிகள் இருந்தனர். ஒருவர் போலீஸ் நிலையம் ஒன்றின் தலைவர்.