பொருளாதார ரீதியில் நலிவடைந்துள்ள மலேசிய விமான நிறுவனத்துக்குப் புத்துயிரூட்டும் நிலையில் அரசாங்கம் இல்லை எனப் பொருளாதார விவகார அமைச்சர் முகம்மட் அஸ்மின் அலி கூறினார்.
“எங்களால் முடிந்த அளவுக்கு நல்லதே செய்ய விரும்புகிறோம். பிரதமர் கூறியதுபோல் கடந்த ஐந்தாண்டுகளாக அதற்கு நிறைய பணம் செலவிடப்பட்டுள்ளது. மேலும் செலவிட போதுமான வசதி இல்லை”, என அஸ்மின் இன்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எம்ஏஎஸ்-ஸை மீட்டெடுக்கும் எண்ணம் அரசாங்கத்துக்கு உண்டா என்று கேட்டதற்கு அமைச்சர் அவ்வாறு பதிலளித்தார்.