பெர்லிஸ் முப்தியின் காரில் தீ

இன்று காலை    பெர்லிஸ் முப்தி முகம்மட் அஸ்ரி சைனுல் அபிடினின் வீட்டுக்கு முன்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது அதிகாரப்பூர்வ காரில்   தீ  பற்றிக்  கொண்டது.

பெட்ரோல்  குண்டு  வீசப்பட்டதால்   காரில்   தீப்  பற்றிக்  கொண்டிருக்கலாம்  என   நம்பப்படுகிறது.

காலை மணி 6.05 வாக்கில் முகம்மட் அஸ்ரியின் வீட்டிலிருந்து போலீஸுக்கு அவசர அழைப்பு வந்ததாக பெர்லிஸ் போலீஸ் தலைவர் நூர் முஷார் முகம்மட்  தெரிவித்ததாக  பெரித்தா ஹரியான் ஆன்லைன்  கூறியது.

“போலீசும் தீ அணைப்பு மற்றும் மீட்புத் துறையும் அவரது வீட்டுக்கு விரைந்தனர்.அங்கு அவரது ஹொண்டா எக்கோர்ட் கார் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

“தீ அணைப்புப் படையினர் தீயை அணைத்தனர்.காரின் முன்பகுதி, இயந்திரம் ஆகியவை பாதிக்கப்பட்டிருந்தன”, என்றவர் கூறினார்.

அச்சம்பவம் மீது போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது.