மார்ச் 15-ல், 50 உயிர்களைப் பலிகொண்ட கிரிஸ்செர்ச் தாக்குதலுக்கு, மலேசியாவுக்கான நியூசிலாந்து உயர் ஆணையர், ஹந்தர் நோட்டெஜ் மலேசியர்களிடம் மன்னிப்பு கேட்டார்.
இன்று காலை, அமைதி ஒற்றுமை ஒன்றுகூடலில் கலந்துகொண்ட நோட்டேஜ், மலேசியர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, அமைதி ஒன்றுகூடலை ஏற்பாடு செய்தமைக்கு நன்றியும் தெரிவித்துகொண்டார்.
“நியூசிலாந்து இச்சம்பவம் குறித்து மிகவும் வருத்தம் அடைந்துள்ளது, நியூசிலாந்து பிரதமர், ஜெசிந்தா ஆர்டன் மற்றும் அனைத்து நியூசிலாந்து மக்கள் சார்பாக நான் வருந்தம் தெரிவிக்கிறேன்.
“நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம், மலேசிய அரசாங்கத்தின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். மலேசியாவிற்கு நியூசிலாந்து கடமைபட்டுள்ளது,” என்று அவர் டத்தாரான் மெர்டேக்கா சதுக்கத்தில் பேசினார்.
நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர், நியூசிலாந்திலும் இதுபோன்றதொரு ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடந்ததாகவும், அது தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டதாகவும் நோட்டெஜ் தெரிவித்தார்.