தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, பத்திரிகையாளர்களைத் தொந்தரவு செய்வதை நிறுத்தச் சொல்லி எச்சரித்தார்.
“தயவுசெய்து பத்திரிக்கையாளர்களைத் தொந்தரவு செய்வதை நிறுத்துங்கள், அவர்கள் தகவல் சேகரிக்க ஓர் இடத்திற்கு வருகின்றனர்.
“அவர்களுடன் கருத்து வேறுபாடு இருப்பின், விளக்கம் கொடுங்கள், உங்கள் தரப்பு வாதங்களை முன்வையுங்கள் அல்லது அவர்கள் மீது வழக்கு தொடர்வதானாலும் செய்யுங்கள்.
“ஆனால், வன்முறையைப் பயன்படுத்த வேண்டாம், அது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல,” என்று அவர் ஒரு டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று, முன்னாள் பிரதமர் நஜிப் பற்றிய செய்தியை வெளியிட்டதால், கோபமடைந்த அம்னோ தலைவர்கள் இருவர், மலேசியாகினி பயிற்சியாளர்கள் இருவரைத் தாக்க முயன்றது குறிப்பிடத்தக்கது.