மலேசிய செம்பனை எண்ணெய்க்கு வட ஆப்ரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் புதிய விற்பனைச் சந்தைகளைத் தேடுகிறது புத்ரா ஜெயா.
மூலப் பொருள் அமைச்சர் தெரேசா கொக், ஆண்டுத் தொடக்கத்திலிருந்தே தன்னுடைய துணை அமைச்சர் ஷம்சுல் இஸ்கண்டர் முகம்மட் ஆகினும் மலேசிய செம்பனை எண்ணெய் மன்ற(எம்பிஓசி)மும் புதிய சந்தைகளைத் தேடி வருவதாகக் கூறினார்.
ஷம்சுல் பாகிஸ்தான், இத்தியோப்பியா நாடுகளுக்குச் சென்று வந்ததாகவும் தான் வட ஆப்ரிக்க நாடுகளுக்குச் சென்றதாகவும், விரைவில் சவூதி அராபியாவில் வணிகக் கருத்தரங்கம் ஒன்றுக்க்குச் செல்ல விருப்பதாகவும் கொக் கூறினார்.
“இவை எல்லாம் புதிய சந்தைகள், ஆனால் செம்பனை எண்ணெயில் நம்முடன் போட்டிபோடும் நாடுகள் ஏற்கனவே அந்தச் சந்தைகளில் நுழைந்து விட்டார்கள்.
“நம்முடைய செம்பனை எண்ணெயை அந்த இடங்களில் விளம்பரப்படுத்தாமல் இருந்தால் இழப்பு நமக்குத்தான்”, என்றவர் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.