தேர்தல் ஆணையம் (இசி) ரந்தாவில் உள்ள 20,922 வாக்காளர்களுக்கும் வாக்காளர் அட்டைகளை அனுப்பத் தொடங்கியுள்ளது.
வாக்காளர்கள் வாக்களிப்பதை ஊக்குவிப்பதற்கு அந்த அட்டைகளை இசி அனுப்புவதாக அதன் தலைவர் அஸ்ஹார் அசிசான் ஹருன் ஓர் அறிக்கையில் கூறினார்.
அந்த அட்டைகளில் வாக்களிப்பு மையம், வாக்களிக்கும் தடம், நாள், நேரம் முதலிய விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.
ரந்தாவில் முன்கூட்டிய வாக்குப்பதிவு ஏப்ரல் 9-இல் நடைபெறும். வாக்களிப்பு நாள் ஏப்ரல் 13.
வாக்காளர் அட்டையில் தேவையான எல்லா விவரங்களும் இருப்பதால் வாக்காளர்கள் தேர்தல் ஆணைய அலுவலகத்தைத் தொடர்புகொண்டு மேல்விவரங்கள் கேட்க வேண்டிய அவசியமே இருக்காது என்று அஸ்ஹார் கூறினார்.
என்றாலும், வாக்களிப்பு நாளன்று வாக்காளர்கள் தங்கள் அடையாள அட்டையை மறக்காமல் கொண்டு வர வேண்டும் என்பதையும் அவர் நினைவுபடுத்தினார்.