ஜோகூர், கூலாய் அருகில், வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 33வது கிலோமீட்டரில் நிகழ்ந்த விபத்தில் முன்னாள் மஇகா உதவித் தலைவர் எஸ்.பாலகிருஷ்ணன் உள்பட நால்வர் உயிரிழந்தனர்.
நள்ளிரவு மணி 12.08க்கு அவ்விபத்து நிகழ்ந்ததாக த ஸ்டார் ஆன்லைன் கூறிற்று.
தீ அணைப்பு மற்றும் மீட்புத்துறையின் அறிக்கை, பாலகிருஷ்ணன் மேலும் அறுவருடன் பயணம் செய்து கொண்டிருந்த வாகனமும் ஒரு கொள்கலன் லாரியும் மோதிக்கொண்டதாக தெரிவித்தது. விபத்தில் பாலகிருஷ்ணனும் மேலும் மூவரும் இறந்துபோக மற்ற மூவரும் காயமடைந்தனர்.
பாலகிருஷ்ணன் 2013-இலிருந்து 2015வரை ஒரு தவணை மட்டும் மஇகா உதவித் தலைவராக இருந்தார்.