பொருளாதார விவகார அமைச்சின் பொறுப்பு இடைக்கால, நீண்டகால பொருளாதாரத் திட்டங்களை வகுப்பது என அதன் துணை அமைச்சர் முகம்மட் ரட்ஸி முகம்மட் ஜிடின் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
அதே வேளை நிதி அமைச்சின் பொறுப்பு வேறு. நிதிக் கொள்கைகள், வரி விதிப்பு, பொருள் கொள்முதல், அரசாங்க நிதிகள் அதன் பொறுப்பாகும்.
நாடாளுமன்றத்தில் வொங் சென் (பிகேஆர்- சுபாங்) கேட்ட கேள்விக்குப் பதிலளித்தபோது ரட்ஸி இவ்வாறு பதிலளித்தார்.
முன்பு பிரதமர்துறையின்கீழ் இருந்த பொருளாதாரத் திட்டமிடல் பிரிவு செய்து வந்த பணிகளைத்தான் இப்போது பொருளாதார விவகார அமைச்சு செய்து வருகிறது என்றாரவர்.
அந்த வகையில் நாட்டின் சமூக-பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை வகுத்தல், செயல்படுத்தல், கண்காணித்தல், மதிப்பிடுதல் அதன் பணிகளாகும்.
இரண்டு அமைச்சுகளும் ஒன்றுசேர்ந்தே பொருளாதார இலக்குகளை நிர்ணயிக்கின்றன என்றும் ரட்ஸி கூறினார்.