தோராயமாக RM28,000 மதிப்புள்ள கடிகாரத்தைக் கையூட்டாகப் பெற்றுக் கொண்டார் எனும் சந்தேகத்தின் பேரில், அமைச்சர் ஒருவரின் அரசியல் செயலாளரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கைது செய்துள்ளது.
புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்தில், மாலை மணி 5 அளவில், 47 வயதான அந்நபர் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓர் அமைச்சின் திட்டங்களை, மேம்பாட்டு நிறுவனம் ஒன்றிற்கு வழங்கும் நோக்கில், அந்நிறுவனத்திடமிருந்து அவர் கையூட்டு பெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அக்கைது நடவடிக்கையை உறுதிபடுத்திய எம்ஏசிசி துணைத் தலைமை ஆணையர் (ஆபரேஷன்) ஆசாம் பாக்கி, எம்ஏசிசி சட்டம் 2009 பிரிவு 16 (a) (A) இன் கீழ் விசாரணை நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.