RM19 மில்லியன் மோசடி, தொழிலபதிபர் மீது குற்றச்சாட்டு

பினாங்கு, கடலுக்கடி சுரங்கப்பாதைத் திட்டத்தில், முகான்மை ஒப்பந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரிடம், RM19 மில்லியன் மோசடி செய்துவிட்டார் என்று தொழிலபதிபர் ஜி ஞானராஜா மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தனது அரசியல் தொடர்பு மூலம், கொண்சோர்ட்டியம் ஜீனித் கொண்ஸ்ட்ராக்‌ஷன் சென் பெர் (Consortium Zenith Construction Sdn Bhd) நிறுவனத்தின், நிர்வாக இயக்குநர், ஜாருல் அஹ்மாட் முகமட் சுல்கிப்ளி மீதான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) விசாரணையைத் தடுத்து நிறுத்த, தன்னால் முடியும் என்று கூறி, 2017-ல், மூன்று முறை ஜாருலை ஏமாற்றியதாக ஞானராஜா மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இன்று, ஷா ஆலாம், செஸ்ஷன் நீதிமன்றத்தில், தனக்கெதிராக வாசிக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து, ஞானராஜா விசாரணை கோரினார்.

RM100,000 ஜாமீன் மற்றும் ஒருவர் உத்தரவாதத்துடன் ஞானராஜா விடுவிக்கப்பட்டார். நாளை, நீதிமன்றத்தில் அவரின் கடப்பிதழை ஒப்படைப்பதோடு, விசாரணைக்கு அழைக்கும்போது கட்டாயம் எம்ஏசிசி அலுவலகம் வரவேண்டும் எனும் நிபந்தணையும் அவருக்கு விதிகப்பட்டுள்ளது.

ஆவணங்கள் ஒப்படைக்கவும் வழக்கு விசாரணைக்கும், மே 6-ம் தேதியை நீதிபதி நிர்ணயித்துள்ளார்.