ஜிடிபி உயர்ந்ததால் தேசிய கடன் குறைந்துள்ளது- மகாதிர்

உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி(ஜிடிபி) பெருகிவருவதைத் தொடர்ந்து தேசியக் கடனளவு குறைந்து வருவதால் நாட்டின் நிதிநிலை ஆரோக்கியமாக உள்ளது என்கிறார் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்.

“ஜிடிபி உயரும்போது கடன்கள் குறையும். இது அப்பட்டமான உண்மை”, என இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது மகாதிர் கூறினார்.

“பல கடன்களைக் கட்டி விட்டோம். அதனால் தேசிய கடனும் குறைந்துள்ளது.

“இனி, நாட்டை நிர்வகிப்பதற்கோ, மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கோ அது பிரச்னையாக இருக்காது”, என்றாரவர்.

அகமட் மஸ்லான்(பிஎன் -பொந்தியான்) தேசிய கடன் இப்போது எந்த அளவில் உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பியபோது மகாதிர் இவ்வாறு கூறினார்.

அகமட், பக்கத்தான் ஹரப்பான் ஆட்சிக்கு வந்த நேரத்தில்886 நாடு ரிம1ட்ரில்லியன் கடன்பட்டிருப்பதாக கூறிக் கொண்டிருந்ததையும் ஆனால், இப்போது பல்வேறு அறிக்கைகளில் தேசிய கடன் தொகை ரிம 686 பில்லியன் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி கேள்வி கேட்டிருந்தார்