ரந்தாவில் பிஎன் ஆதரவாளர்களுக்கு நிறைய தொலைபேசி அழைப்புகள் வருவதாகவும் அவை பிஎன்னுக்கு வாக்களித்தால் ரிம50 கொடுக்கப்படும் என்று கூறுவதாகவும் முகம்மட் ஹசான் இன்று கூறினார்.
பிஎன் வேட்பாளரான அவர், தம் கட்சி பணம் கொடுத்து வாக்குகளை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டதில்லை என்றும் அது யாரோ பிஎன் பெயரைக் கெடுப்பதற்காக பேற்கொண்டிருக்கும் முயற்சி என்றும் கூறினார்.
“பிஎன் தீவிர ஆதரவாளர்கள் என்று தெரிந்தே அழைக்கிறார்கள். பிஎன்னுக்கு வாக்களியுங்கள், பணம் கிடைக்கும் என்கிறார்கள்.
“அது குறித்து போலீசில் புகார் செய்யுமாறு கூறியிருக்கிறேன். இது பிஎன்னின் பெயரைக் களங்கப்படுத்தும் முயற்சி என்றே நினைக்கிறேன்”, என்றார்.
கடந்த இரண்டு மூன்று நாள்களாக இப்படிப்பட்ட அழைப்புகள் வருவதாக பலர் தம்மிடம் முறையிட்டிருப்பதாக முகம்மட் கூறினார்.
இவ்விவகாரத்தைத் தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.