இரண்டு நாட்களுக்கு முன்னர், 126 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (அமெரிக்கா $1 = RM4.08), இக்குவானிமிட்டி சொகுசுக் கப்பலை வாங்கியப் பின்னர், இன்று காலை, பங்குச் சந்தையில், கெந்திங் நிறுவனத்தின் பங்குகள் தீவிரமாக வர்த்தகம் செய்யப்பட்டன.
அந்த ஆடம்பரக் கப்பலால், கெந்திங் சூதாட்ட வணிகம் மற்றும் விடுமுறை வணிக விஐபி வாடிக்கையாளர்களை ஈர்க்க முடிந்ததாக ஆர்.எச்.பி. ஆராய்ச்சி கூறியுள்ளது.
“கப்பலைப் பராமரித்தல் மற்றும் கப்பல் இயக்க செலவுகளை முறையாக நிர்வகித்து, அரசாங்கத்தின் செலவினத்தை விட குறைக்க முடியும் (காலாண்டில் RM5-6 மில்லியன்) என நாங்கள் நம்புகிறோம்,” என ஒரு குறிப்பில் இன்று அது தெரிவித்தது.
RM8.79-லிருந்து RM8.31 புதிய இலக்கு விலையில் ‘வாங்க’ அந்நிறுவனத்திற்கு ஆர்.எச்.பி. நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
- பெர்னாமா