“கிள்ளிங்”குக்கு ஆதரவு அளிக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்ளும் பதாதைகள் ரந்தாவில் காணப்பட்டன.
பதாதைகளில் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் டாக்டர் எஸ்.ஸ்ரீராமின் படம் இருந்தது. பிஎன்னுக்கு வாக்களிக்கச் சொல்லும் விதத்தில் அக்கட்சிச் சின்னத்துக்குப் பக்கத்தில் பெருக்கல் குறியும் போடப்பட்டிருந்தது.
பிஎன் வேட்பாளர் முகம்மட் ஹசான் அது பிஎன் வேலை அல்ல என்று மறுத்தார். பிகேஆர்தான் பிஎன் பெயரை கெடுப்பதற்கு அப்படிப்பட்ட வேலைகளைச் செய்வதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
மூன்று இடங்களில் காணப்பட்ட பதாதைகளில், “ஒரு கிள்ளிங்குக்கு வாக்களிக்காதீர். இது நம் நாடு. அவருக்கு அதிகாரம் கொடுக்கக் கூடாது. நெகிரி மலாய்க்காரர்களே பொங்கி எழுங்கள். நாம் உண்மையான ரந்தாவ் மைந்தர்கள் என்பதைக் காண்பிப்போம்” என்று எழுதப்பட்டிருந்தது..
அது நெகிரி செம்பிலான் வட்டார மலாய்மொழி, மினாங்காபாவ் மொழி ஆகியவை கலந்து எழுதப்பட்டிருந்தது.
அப் பதாதைகள் குறித்து ஹரப்பான் போலீஸ் புகார் செய்துள்ளது.