இசா முகம்மட் மீதான வழக்கு அக்டோபர் 9-இல் விசாரணைக்கு வருகிறது

இன்று கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் நம்பிக்கை மோசடி செய்ததாக (சிபிடி) ஒரு குற்றச்சாட்டும் ரிம3 மில்லியனுக்குமேல் கையூட்டு வாங்கியதாக ஒன்பது குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்ட பெல்டா முன்னாள் தலைவர் முகம்மட் இசா சமட் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

இசா,70, எல்லாக் குற்றச்சாட்டுகளையும் மறுத்ததைத் தொடர்ந்து நீதிபதி வழக்கு விசாரணைக்கான நாளை முடிவு செய்தார்.

விசாரணை அக்டோபர் 7 தொடங்கி 9வரையிலும் பிறகு அக்டோபர் 14-இலிருந்து 25வரையிலும் நடைபெறும்.

முன்னதாக அவர்மீதான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டு குற்றங்களை அவர் ஒப்புக்கொள்கிறாரா இல்லையா என்று கேட்கப்பட்டதற்கு “விசாரணை தேவை” என்றார் இசா.