பினாங்கில் தொழிற்சாலைகள் மூடப்பட்டதாக பொய்யான செய்திகள்

பினாங்கு அரசின் முதலீட்டு அமைப்பான இன்வெஸ்ட்பினேங், மாநிலத்தில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டதாகவும் ஆள்குறைப்புச் செய்யப்பட்டிருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் உலா வரும் செய்திகள் பொய்யான செய்திகள் என்று கூறிற்று.

மூடப்பட்ட கூறப்படும் தொழிற்சாலைகளைத் தொடர்புகொண்டு இன்வெஸ்ட்பினேங் பேசியதாகவும் அவை அச்செய்திகளை மறுத்தன என பினாங்கு முதலமைச்சரின் சிறப்பு ஆலோசகர் லீ கா சூன் கூறினார்.

“அந்தத் தொழிற்சாலைகளில் பல உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளன. பொய்யான செய்திகள் அவற்றின் பங்கு விலைகளையும் அவற்றின் தொழிலாளர்களின் ஊக்கத்தையும் பாதிக்கலாம்”, என இன்வெஸ்ட்பினேங்கின் இயக்குனருமான லீ கூறினார்.

பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகள் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் லீ தெரிவித்தார்.