பெங்கேராங் பெட்ரோனாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வெடிப்பில் இருவருக்குக் காயம்

ஜோகூர், பெங்கேராங்கில் உள்ள பெட்ரோனாசின் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிகல் ஆலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட ஒரு வெடிப்பில் மலேசியர் இருவர் காயமடைந்தனர்.

சம்பவத்தை உறுதிப்படுத்திய பெட்ரோனாஸ் வெடிப்பைத் தொடர்ந்து தீப் பற்றிக் கொண்டது என்றும் ஆனால், அது விரைவில் அணைக்கப்பட்டது என்றும் ஓர் அறிக்கையில் கூறியது.

“எங்கள் ஆபத்து, அவசர உதவிக் குழு சுறுசுறுப்பாக பணியாற்றி 30 நிமிடத்தில் தீயை அணைத்தது. நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது.

“விசாரணை நடப்பதால் அது முடிந்ததும் மேலதிக தகவல்கள் வழங்கப்படும்” என்றும் அது கூறியது.

அதிகாலை மணி 1.25க்கு அச்சம்பவம் நிகழ்ந்தது.

அந்த அதிர்வெடிப்பின் அதிர்வுகள் 80கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள பாசிர் கூடாங்கிலும் உணரப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது.