சண்டகான் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று பாஸ் முடிவு செய்துள்ளது.
அதற்குப் பதிலாக, பக்கத்தான் ஹரப்பானுக்கு எதிராகக் களமிறங்கும் எதிரணி வேட்பாளருக்கு அது தனது ஆதரவை வழங்கும்.
“மே11-இல், சாபா, சண்டகானில் நடைபெறும் இடைத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவதில்லை என பாஸ் மத்திய செயல்குழு முடிவு செய்துள்ளது”, என பாஸ் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
“அந்த இடைத் தேர்தலில் பாஸ் எதிரணி வேட்பாளரின் வெற்றிக்குப் பாடுபடும்”, என்றவர் சொன்னார்.
முன்னாள் சண்டகான் எம்பி ஸ்டீபன் வோங் காலமானதை அடுத்து இந்த இடைத் தேர்தல் நடக்கிறது.
ஹரப்பான், வோங்கின் மகள் விவியான் யோங்கை அங்கு வேட்பாளராகக் களறிறக்கும் எனத் தெரிகிறது.