டாக்டர் மகாதிரைச் சந்தித்தார் ஜோகூர் புதிய எம்பி: மாநில ஆட்சிக்குழுவில் மாற்றமா?

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டை ஜோகூரின் புதிய மந்திரி புசார் டாக்டர் ஷருடின் ஜமால் இன்று காலைச் சந்தித்தார்.

கடந்த வாரக் கடைசியில் அந்த பெர்சத்து சட்டமன்ற உறுப்பினர் மந்திரி புசாராக பதவியேற்ற பின்னர் அவ்விருவரும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.

இருவரும் சந்தித்துப் பேசும் படங்களை டாக்டர் மகாதிர் அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இச்சந்திப்பு ஜோகூர் ஆட்சிக்குழுவிலிருந்து டான் ஜொங் பின்னும்(டிஏபி) மஸ்லான் பூஜாங்கும் (பெர்சத்து) நீக்கப்படுவார்கள் என்று வதந்திகள் உலவும் வேளையில் நிகழ்ந்துள்ளது.

மகாதிரைப் போலவே அவ்விருவரும்கூட ஜோகூர் அரண்மனைக்குப் பிடிக்காதவர்களாகி விட்டார்கள் என்று தெரிகிறது..

ஷருடின் எம்பி-ஆக பதவி ஏற்பதற்குமுன், ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் இஸ்கண்டார் ஆட்சிக்குழுவில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று அவரிடம் முன்நிபந்தனை விதித்தார் என்றும் கூறப்படுகிறது.