புனித வெள்ளி : கிறிஸ்துவ அரசு ஊழியர்களுக்குப் பதிவு இல்லா விடுப்பு

இன்று கொண்டாடப்படவுள்ள, புனித வெள்ளி விழாவை முன்னிட்டு, கிறிஸ்துவ அரசு ஊழியர்கள் பதிவு இல்லா, ஒருநாள் விடுப்பு எடுத்துக்கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

இது இவ்வாண்டு தொடக்கம் அமலுக்கு வருகிறது.

எனினும், இந்த நடைமுறை, வெள்ளிக்கிழமைகளில் விடுமுறையில் இருக்கும் மாநிலங்களுக்கு இல்லை எனப் பொதுச் சேவைத்துறை (ஜேபிஏ) தலைமை இயக்குநர், போர்ஹான் டோலா, ஜேபிஏ இணையத்தளத்தில் வெளியிட்ட ஒரு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.