வழிபாட்டு இல்லங்களில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது

புக்கிட் அமான், ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்காவில் நிகழ்ந்த குண்டு வெடிப்புத் தாக்குதல்களை அடுத்து தொழுகை இல்லங்கள் உள்பட நாடு முழுக்க பாதுகாப்பை முடுக்கி விட்டுள்ளது.

நியு சிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் இரண்டு பள்ளிவாசல்களில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸ் கடந்த மாதம் கண்காணிப்புப் பணியை அதிகரித்ததாக இடைக்கால இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் அப்துல் ஹமிட் படோர் கூறினார்.

“ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்கா தாக்குதல்களைத் தொடர்ந்து பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டது”, என்றவர் தெரிவித்ததாக மலேசியன் இன்சைட் கூறிற்று.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்காவில் தேவாலயங்களிலும் தங்குவிடுதிகளிலும் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 300 பேருக்குமேல் கொல்லப்பட்டனர்.