எக்ஸ்கோ விவகாரத்தில் பதவி விலகும் நிலைக்குச் சென்று விட்டாராம் மகாதிர்

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் ஜொகூர் ஆட்சிக்குழு மாற்றி அமைக்கப்பட்டதால் ஆத்திரமுற்று பதவி விலகும் நிலைக்குச் சென்று விட்டதாக ஒரு வட்டாரம் தெரிவித்தது.

பெர்சத்து தலைவருமான மகாதிர், திங்கள்கிழமை இரவு நடைபெற்ற அக்கட்சியின் உச்சநிலைக் கூட்டத்தில் இதைத் தெரிவித்தாராம்.

“ஆட்சிக்குழுவை அப்படியே வைத்துக்கொள்ளச் சொல்லித் தாம் கூறிய ஆலோசனையைப் புதிய மந்திரி புசார்(டாக்டர் ஷருடின் ஜமால்) பின்பற்றாதது அவருக்கு ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது” என்று அவ்வட்டாரம் மலேசியாகினியிடம் கூறிற்று.