கிள்ளான் பள்ளத்தாக்கில் நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியது

சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு ஆலையில் தரமுயர்த்தும் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து சிலாங்கூரின் ஆறு மாவட்டங்களில் நீரளிப்பு வழக்க நிலைக்குத் திரும்பியது.

சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு ஆலையில் பழுதுபார்க்கும் வேலைகள் நடந்ததால் புதன்கிழமை தொடங்கி 86 மணி நேரத்துக்கு ஷா ஆலம், கிள்ளான், கோலாலும்பூர், பெட்டாலிங் ஜெயா, கோம்பாக், கோலா லங்காட், கோலா சிலாங்கூர் ஆகிய பகுதிகளில் 577 இடங்களில் நீரளிப்பு தடைப்பட்டிருந்தது. அதனால் 4,143,465 பேர் பாதிக்கப்பட்டனர்.

சிலாங்கூர் நீரளிப்பு நிறுவனம்(சபாஸ்) நீர் விநியோகம் தடைப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டது. அதே வேளை நீர் விநியோகம் சிரடைவதற்கு விரைந்து பணியாற்றிய தரப்புகளுக்கும் நீரளிப்பு துண்டிக்கப்பட்டதால் ஏற்பட்ட சொளகர்ய குறைவைப் பொறுத்துக்கொண்ட பொதுமக்களுக்கும் அது நன்றி தெரிவித்தது.