கோலாலும்பூர் தாமான் கிராமாட் அடுக்குமாடி வீட்டில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து அதிலிருந்த 222 குடியிருப்பாளர்கள் இன்று நணபகல் அப்புறப்படுத்தபட்டார்கள்.
37 குடும்பங்களைச் சேர்ந்த அந்த 222 பேரும் தாமான் கிராமாட் இடைநிலைப்பள்ளிக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிலாங்கூர் மாநில பேரிடர் மேலாண்மை தலைவர் அஹ்மட் பைருஸ் முகம்மட் யூசுப் கூறினார்.
“கட்டிடம் தொடர்ந்து விரிசல் கண்டு வருவதால், அதிலுள்ள அனைவரும் வெளியேற வேண்டும் என்று அம்பாங் ஜெயா முனிசிபல் மன்றம் பரிந்துரைத்துள்ளது”, என்றாரவர்.
குடியிருப்பாளர்களில் ஒருவரான சுகிமான் முக்னி,72, நேற்று கனமழை பெய்ததைத் தொடர்ந்து சுவர்களில் விரிசல் ஏற்பட்டது என்றார்.
“இன்று காலை விரிசல்கள் மேலும் மோசமடைந்ததால் இனி இருப்பது ஆபத்து என்ற முடிவுக்கு வந்தோம்”, என 26 ஆண்டுக் காலமாக அங்குக் குடியிருக்கும் சுகிமான் கூறினார்.
-பெர்னாமா