இந்தோனேசியாவில் 200க்கு மேற்பட்ட தேர்தல் அதிகாரிகள் களைப்பு மிகுதியால் சாவு

இந்தோனேசியாவில் தேர்தல் முடிந்து வாக்கு-எண்ணும் பணி நடைபெறுகிறது. மே 22 வரை அது தொடரும். நீண்ட காலம் தேர்தல் பணிகளில் ஈடுபடுவதால் தேர்தல் அதிகாரிகள் களைத்துப் போகிறார்கள். இப்படிக் களைத்துப் போனவர்களில் கடந்த வியாழக்கிழமை வரை மொத்தம் 222 பேர் செத்துப் போனார்களாம்.

இதனால் கவலைகொண்ட பல தரப்பினரும் பல்வேறு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் வைப்பதை மாற்ற வேண்டும் என்கின்றனர்.

இந்தோனேசியாவின் அரசமைப்பு நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மாபுட் எம்டி, அதிபர் தேர்தலையும் சட்டமன்றத் தேர்தல்களையும் தனித்தனியே நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.

இந்தோனேசிய தேர்தல் ஆணையத் தலைவர் விர்யன் அசிஸ், இறந்தவர்கள் போக, 1695 தேர்தல் பணியாளர்கள் நோயுற்றிருப்பதாகவும் கூறினார்.