புத்ரா ஜெயாவும் பக்கத்தான் ஹரப்பான் ஆதரவாளர்களும் சரமாரியாக தாக்குதல் நடத்தும் வேளையில் அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசா ஜோகூர் அரண்மனையைத் தற்காக்க முன்வந்துள்ளார்.
இளைஞர், விளையாட்டு அமைச்சர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் ஜோகூர் பட்டத்திளவரசர் குறித்து தெரிவித்த கருத்துகளுக்கு அனுவார் மூசா அவரைச் சாடினார்.
பெர்சத்து இளைஞர் தலைவர் அவரின் “போஸ்” டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கு எப்படி வேண்டுமானாலும் “துதி பாடலாம்” ஆனால் எல்லைமீறிச் சென்றுவிடக் கூடாது.
“நல்ல வேளையாக, அவரின் சிறுபிள்ளைத்தனமான பேச்சுக்கு துங்கு இஸ்மாயில் பக்குவமாக பதிலளித்துள்ளார்.
“சைட் சாதிக் மக்களுக்காக போராடுவதாகக் கூறப்படுகிறது.
“எத்தனை நாள்களாக மக்களுக்காக போராடி வருகிறீர்கள். ஜோகூர் அரண்மனை பல நூற்றாண்டுகளாக அதைச் செய்து வருகிறது”, என்று அனுவார் முக நூலில் பதிவிட்டிருந்தார்.
நேற்று சைட் சாதிக், பிரதமரை மாற்ற வேண்டும் என்று துங்கு இஸ்மாயில் குறிப்பிட்டிருந்தது பற்றிக் கருத்துரைத்தார். மகாதிரைப் பதவிவிலக வேண்டும் என்று கூறுபவர், முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஊழல் புரிந்ததாக பரவலாகக் குற்றம் சாட்டப்பட்டபோது அவரை ஏன் பதவி விலகச் சொல்லவில்லை என்றவர் கேட்டிருந்தார்.
துங்கு இஸ்மாயில் மலேசிய காற்பந்துச் சங்க(எப்ஏஎம்)த்துக்குத் தலைவராகி ஓராண்டுக்குள் அதிலிருந்து விலகியதையும் சைட் சாதிக் சுட்டிக்காட்டினார்.
“எப்ஏஎம் பொறுப்புகளைப் பார்த்துக் கொள்ள முடியாமல் ஒருவர் ஓராண்டுக்குள் பதவி விலகுகிறார். அதனுடன் ஒப்பிடும்போது பிரதமரின் பதவி எவ்வளவு பெரிது. சற்று எண்ணிப் பாருங்கள்”, என்றவர் குறிப்பிட்டிருந்தார்.
“